Thursday 27 June 2013

Album

 ஆல்பம்... இன்று முழுமைபெற்ற ஆல்பம். அர்ச்சனா மற்றும் ஸ்ரீஜித் திருமண வரவேற்பு. அம்பத்தூரில் நடைபெற்றது. நண்பர் சிவசங்கரனுக்காக...

கோழை..


கார்த்திக்.....படித்தவன்... அறிவுடையவன்...  இன்று நம்முடன் இல்லை.  நேற்று காலை தாம்பரம் அருகே ரயிலில் விழுந்து தற்கொலை.  காரணம் சொந்தமோ, சமூகமோ? அது தேவையில்லை.  ஏன் இப்படிகோழைத்தனமான முடிவு.  திருமணமான ஆறு மாதத்தில்...!  நம்மால் நினைத்தவுடன் அழித்துக் கொள்வதுபோல அவ்வளவு எளிதில் உருவாக்கிட முடியுமா? 'கணநேரம் ஷனபித்தம்'... என்பார்கள் . கோழைகள்  யோசிக்க வேண்டும். இழப்பு அவன் உயிர் மட்டுமா?

Monday 24 June 2013

Fools Cap?

ஃபுல்ஸ்கேப் பேப்பர் ...  அடிக்கடி காதில் விழும் வார்த்தை. எப்படி அந்த வார்த்தை வந்தது?  நாடகங்களில் பார்க்கலாம்,  காமெடியன் தலையில் பெரிய வெள்ளை குல்லா இருக்கும். ஒருமுறை ஷேக்ஷ்பியர் நாடகத்தின்  போது  தொப்பி  கொண்டு  போக  மறந்தார்கள்.  அப்போது  உதவிக்கு  வந்தது  முழு வெள்ளை தாளான '
ஃபுல்ஸ்கேப்'  பேப்பர். காமெடியன் தலைக்கு போட்ட தொப்பி 'Fools Cap' (பூல்ஸ் கேப்)  தான் நாளடைவில் ஃபுல்ஸ்கேப் ஆனது.

Sunday 23 June 2013

நண்பர்கள்...



நல்ல நண்பர்கள்...   இளம் வயதில் உருவாகும் தோழமை நீண்டநாட்கள் நீடிக்கும். காரணம் அதில் எதிர்பார்ப்பு எதுவும் இருப்பதில்லை என்பதனால். ஆனால் முப்பதை தாண்டி வரும் தோழமை சிலவற்றை தவிர பல சிலநாட்கள் கூட நீடிப்பதில்லை. காரணம் குறைகள் சொன்னால் கோபம் வரும். ஏதோ ஒருவித எதிர்பார்ப்பிருக்கும். அது நிகழாதபோது ஒரு கோபம் வரும். அது இளம் வயது தோழமைக்கு வருவதில்லை. தோழன் தோழமையினின்று விலகினால் இழப்பில்லை. நல்ல தோழனை தேடுவோம். வாழ்க்கை தேடலில்தானே வெல்கிறது. இதை யாரும் போட்டியாக நினைக்க தேவையில்லை. எம்வழி என்றுமே தனிவழி....

Saturday 22 June 2013

ஞானம்....எனக்கும் இருக்கும்போல...

நான் இணையதளத்தில் அவ்வளவாக மேய்வதில்லை. காரணம் அது இத்துப்போனவர்களின் அதாவது பொதுவில் விலை போகாதவர்கள் கூடாரம் என்ற நினைப்பு. சமீபத்தில் நிசப்தம் கண்ணில் பட்டது. அப்போதுதான் மணி யான மக்களும் இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இப்போது என் அலசல் எங்கோ எதற்கோ அலைகிறது. மணிகண்டனை தொடர்ந்து ஞானியும், மனுஷ்யபுத்ரனும் பலரும் தென்படுகிறார்கள். பார்ப்போம், படிப்போம், பயில்வோம் என்று என்று என் தேடல் தொடர்கிறது.

வழிகாட்டல் தேவை

தற்போதுதான் இணைந்துள்ளேன். அடிப்படை இயக்கம் தெரியமலே சுய முயற்சி. வலைப்பதிவை முறைப்படுத்த யாரேனும் பயிற்சி அளித்தால் வரவேற்கிறேன்..