Wednesday 3 July 2013

எது நீங்க...?

கதை
முட்டாளுக்கு மூணு வழி என்று எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு. ஆரம்பத்தில் அதற்கு எனக்கு அர்த்தம் புரியவில்லை. ஒரு பெரியவரிடம் கேட்ட போது அவர் அதற்கு விளக்கம் சொன்னார். அதாவது, ஒருவன் நடந்து போய்க் கொண்டிருக்கிறான் . போகிற வழியில் தரையில் கிடந்த சானத்தையோ எதையோ மிதித்து விடுகிறான். அவன் புத்திசாலியாக இருந்திருந்தால் வழியில் கவனமாக இருந்து அதை மிதிக்காமல் தவிர்த்திருப்பான். அல்லது மிதித்தபின் ஒரு கல்லிலேயோ அல்லது தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்திருப்பான். ஆனால் முட்டாள் அப்படிச் செய்ய மாட்டன். முதலில் தான் மிதித்தது சானம்தானா எனத் தொட்டுப் பார்ப்பான். பின் அதை மூக்கின் அருகில் கொண்டு வந்து மோர்ந்து பார்ப்பான். அதை மேலும் உறுதி செய்ய, அதை நக்கி வேறு பார்ப்பான்.. ஆரம்பதிலேயே சுதாரித்திருந்தால் காலில் பட்டது காலோடு போயிருக்கும்.. காலில் பட்டது விரலில் பட்டு, மூக்கில் பட்டு , கடைசி நாக்கிலும் பட்டு..... ...     யாரோ எழுதி எப்போதோ படித்தது......

No comments:

Post a Comment